சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடை மற்றும் ரீ-சேட் அறிமுக நிகழ்வு » Sri Lanka Muslim

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடை மற்றும் ரீ-சேட் அறிமுக நிகழ்வு

t99

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் அனுசரணையில் கழகத்திற்கான புதிய சீருடை மற்றும் ரீ-சேட் அறிமுக நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் ஏ.எல்.எம்.நியாஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை அஸ்லம் பிக் மார்ட் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான ஏ.ஆர்.எம்.றியாஜ் பிரதம அதிதியா கலந்து கொண்டு சீருடையை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அஸ்லம் விக் மார்ட் நிறுவனத்தின் முகமையாளர் எஸ்.ஏ.நிஸ்வான், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சபான், சமூக சேவையாளர் எம்.எம்.றிபான், இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.முஹம்மட் சிராஜ் உள்ளிட்ட விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

t.jpg2 t.jpg2.jpg3 t.jpg2.jpg3.jpg6 t.jpg2.jpg3.jpg64

Web Design by The Design Lanka