சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும் » Sri Lanka Muslim

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும்

EH0011[1]

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின்  10ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு  திறமைகாட்டிய வீரர்கள் கௌரவிப்பும்,  வருடாந்த பொதுக்கூட்டமும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக  விரிவுரையாளருமான எம். முஹம்மது சிராஜ்  தலைமையில்  அட்டப்பள்ளம் ஹாப் மூன் ரிசோட்டிலில்  நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தில்; பத்து வருடங்களுக்கும் மேல் சேவையாற்றிய இல்யாஸ் அஸீஸ்,  ஐ.எம். அஜீன், ஏ.வி.எம். றிஸ்வி, எம். முபாரக் மற்றும் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு தெரிவான கழகத்தின் வீரர் றிசாட் அஹமட், சாதாரண தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேற்றை பெற்ற கழகத்தின் வீரர் சல்பி ஜமால்  ஆகியோர்கள் பாராட்டி  நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது  2018ஆம்   ஆண்டுக்கான புதிய நிருவாக் தெரிவின்   புதிய   ஆண்டுக்கான புதிய தலைவராக ஏ வி.எம். நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ரியாஸ் தெரிவு செய்யப்பட்டதுடன்,  செயலாளராக எம்.முஹம்மது சிராஜ், பொருளாளராக ஏ.ஆர்.எம். நஜா, தவிசாளராக யு.கே.எம் முபீன் முகாமையாளர்களாக எஸ்.எம். நியாஸ், எப்.ஜிப்ரி உதவித் தலைவராக ஏ.எச்.ஜே.ஏ. அப்ளால் உதவிச் செயலாளராக எம்.என்.எம். சஜா,  சர்வேதேச தொடர்புகளுக்காக எம்.ஏ.ஏ. சிபாக், எஸ்.எச்.இஹ்லாஸ்,  சட்ட ஆலோசகராக ஏ.ஜே சம்லி சபி, ஊடக இணைப்பாளராக யூ.கே.காலித்தீன், அணித் தலைவராக இலியாஸ் அஸீஸ்  ; ஆலோசனைக்கு குழு உறுப்பினர்களும்  தெரிவு செய்யப்பட்டனர்.

EH0011[1]

Web Design by The Design Lanka