சாய்ந்தமருது எதிர்கால சந்ததியின் நிம்மதியான வாழ்க்கைக்கே தனியான பிரதேச சபை - கிபத்துல் கரீம் (video) » Sri Lanka Muslim

சாய்ந்தமருது எதிர்கால சந்ததியின் நிம்மதியான வாழ்க்கைக்கே தனியான பிரதேச சபை – கிபத்துல் கரீம் (video)

hibathul kareeem

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(வீடியோ)
 
அம்பாறை மாவட்டத்திலே முக்கிய பேசும் பொருளாக நிகழ் காலத்தில் இருந்து வருகின்ற சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை எனும் விடயத்தில் நியாயம் இருக்கின்றதா என்பதனை பற்றி சாய்ந்தமருது பிரதேசத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியில் அதிகம் பங்காறி சாய்ந்தமருதினை முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகமாறி அமைத்தவரும், அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரசின் சிரேஸ்ட ஆலோசகரும், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், பிரபல்ய தொழில் அதிபருமான அல்-ஹாஜ் கிபத்துல் கரீம் உடனான நேர்காணலின் பொழுது அவர் முக்கியமாக கூறியதாவது…

சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை தேவையாக உள்ளது என்பது பற்றிய கோசமானது நேற்று இன்று முளைத்த விடயம் என்று கூறிவிட முடியாது. 1987ம் ஆண்டுக்கு முன்னர் சாய்ந்த மருதுதிற்கென்று தனியான சபை இருந்த்திருக்கின்றது. பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினுடைய காலத்தில்தான் அரசியல்வாதிகள் கல்முனையுன் இணைத்து வேறு ஒரு சபையாக மாற்றப்பட்டது. அதற்கு பிற்பாடு இருந்த காலத்தில் எங்களுக்குறிய சபையின் முக்கியத்துவத்தினை மக்கள் உணர்ந்த நிலையில் தனியான சபை தேவை பாட்டிற்கான பல காரணங்கள் இருக்கின்றன.

ஒரு பக்கம் பார்க்க போனால் இலங்கையில் இருக்கின்ற பிரதேச செயலகங்கள் அணைத்திற்கும் தனியான பிரதேச சபைகள் இருக்கின்றது. அந்த வகையிலே ஏன் சாய்ந்த மருதிற்கு இருக்கின்ற பிரதேச செயலகத்திற்கும் தனியான பிரதேச சபை ஏன் இருக்க கூடாது என்பதே சாய்ந்தமருது மக்களின் கேள்வியாகும். அத்தோடு சாய்ந்த மருது பிரதேசத்தினை சேர்த்து நிருவாக படுத்துகின்ற கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது மக்களினுடைய கருத்துக்களுக்கு எவ்விதமான முன்னுரிமைகளும் அளிக்கப்பட்டாமல் இருக்கும் அதே நேரத்தில் உறுப்பினர்களுடைய எந்த கருத்துக்களும் உள்வாங்கப்படுவதில்லை. இவ்வாறு தொடர்ந் தேர்ச்சியாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கல்முனை மாநகர சபையானது புறம்தள்ளி வருகின்ற காரணத்தினாலேயே சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை வேண்டும் என்ற கோசம் மக்கள் மத்தியில் நியாய பூர்வமாக எழுப்பப்பட்டு வருக்கின்றது.

இந்த தனியான பிரதேச சபைக்கான கோசத்தினை ஆரம்ப காலத்திலிருந்தே சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் என்ற இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு பிற்காலத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்டு பள்ளிவாயல்கள் ஊடாகவும் முன்னெடுத்து வந்த நிலையில் எமது மக்கள் கொழும்பிற்கு சொந்த பணத்தினை செலவு செய்து அமைச்சர்களையெல்லாம் சந்தித்து தனியான பிரதேச சபைக்காக போராடி வருகின்றனர். தொடர்ந்து கேற்கப்பட்ட கேள்விகளுக்கு கிபத்துல் கரீமிடமிருந்து கிடைத்த பதில்கள் வருமாறு…

கேள்வி:- பிரதேச சபை விவகாரம் ஒரு புறமிருக்க கல்முனை சாய்ந்தமருது என்ற பிரதேச வாதம் தேசியத்திலேயே பூதாகரமாக பேசப்படுவதற்கான காரணம் என்ன?

கிபத்துல் கரீம்:– ஏற்கனவே நான் கூறியதனை போன்று பிரதேசவாதம் எனும் வார்த்தை பிரயோகத்தினை ஆரம்பித்தவர்கள் கல்முனை மக்களேயே சாரும். கல்முனை மாநகர சபையில்தான் பிரதேசவாதம் தலை தூக்கியது. சாய்ந்த மருத்து மக்களினுடைய பிரச்சனைகள், தேவைகள், இன்னும் பல விடயங்களை பற்றி சபையிலே பிரஸ்தாபிக்கின்ற பொழுது ஏற்பட்ட முறுகல் நிலைமைகளும் மற்றும் மறைந்த மாமனிதர் அஸ்ரஃப் அவர்களுடைய காலம் தொடக்கம் இருந்து வந்த பிரதேசவாத பேசுக்களாலுமே சாய்ந்தமருது மக்கள் தனியான பிரதேச சபையினை கோரி நிற்கின்றார்களே தவிர சாய்ந்தமருது மக்களிடம் பிரதேசவாதம் என்ற சொல்லிற்கே இடமில்லை.

கேள்வி:- சாய்ந்தமருதிற்கான பிரதே சபை உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உக்களுக்கு இருக்கின்றதா?

கிபத்துல் கரீம்:– சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதில் இடம் பெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையினை தேர்தல் முடிந்த கையோடு பெற்று தருவதாக கூறியிருந்தார். அதனால்தான் சிறீலங்கா முஸ்லிம் காங்க்ரசிற்கு எதிராக புரட்சிகரமாக இருந்த சாய்ந்தமருது மக்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் உருண்டோடி கொண்டிருக்கின்ற படியினாலும், எங்களது அடுத்த தலைமையான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையான றிசாட் பதுர்டீன் மிகவும் சுறுசுறுப்பாக முன்னெடுத்து வருவதினாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பைசர் முஸ்தாவின் நம்பிக்கை அளிக்க கூடிய வாக்குறுதியின் அடிப்படையிலும் எமக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூலம் மிக விரைவில் தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி:- சாந்தமருதிலே பெரும் தலைவர் அச்ரஃப் அவர்களுடைய காலத்திலிருந்தே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்த நீங்கள் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டமைக்கான காரணம் என்ன?

கிபத்துல் கரீம்:- கடந்த பொது தேர்தலின் பொழுது சரிவு நிலையில் இருந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை அதன் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் சாய்ந்தமருதிலே கட்சியினை தூக்கி நிறுத்தியிருந்தோம். அவர்கள் தேர்தல் காலங்களில் எங்களை அரவணைத்து காட்டிய ஆர்வம் போலவும் எங்களுக்கு அளித்த வாக்குறுதியான தனியான பிரதேச சபை என்ற விடயங்கள் எல்லாம் இழுத்தடிப்பு செய்யப்பட்டும் மளங்கடிக்கப்பட்டு வருகின்றமையினாலுமே நாங்கள் எங்களுடைய அடுத்த தலைமையான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையோடு கைகோர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கேள்வி:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை மாற்ற வேண்டும் என்ற ரீதியில் அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று கொண்டிருக்கின்ற முஸ்தீபுகள் பற்றி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்காக ஆரம்ப காலத்திலிருந்தே உழைத்து வந்த நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

கிபத்துல் கரீம்:- பதினைந்து வருடகாலமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்திகளை பார்ப்போமானால் 50 வீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சிகளையே நாங்கள் சந்தித்து வருக்கின்றோம். இதுவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலை மாற்றப்பட வேண்டியதற்கான அடிப்படை காரணமாக இருக்கின்றது.

கேள்வி:- முஸ்லிம் தேசிய முன்னணி என்று உறுவாக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திலே புதியதொரு எழுச்சி முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?

கிபத்துல் கரீம்:- எகிப்திலே ஜனநாயக ரீதியாக கொஸ்னி முபாறக்கிற்கு எதிரான எழுச்சி, லிபியாவிலே கேனல் கடாபிக்கு எதிரான எழுச்சி, ஏன் எவருமே என்னி பார்த்திராத எமது நாட்டிலே அசைக்க முடியாமல் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸவிற்கு எதிரான எழுச்சிகளெல்லாம் வெற்றி பெற்றிருக்கின்ற நிலையில் அப்துர் ரவூப் ஹக்கீமிற்கு எதிரான ஜனநாயக ரீதியான எழுச்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அல்லாஹ் முந்தி அடுத்தாக எங்களிடம் பலமாக இருக்கின்றது.

கேள்வி:– இவ்வாறு கூருகின்ற நீங்கள் முஸ்லிம் காங்கிரசில் இருக்கதக்க கடந்த பாலமுனை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு என்றும் இல்லாதவாறு பல்லரயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் வெற்றி கரமாக முடிவடைந்துள்ளதே?

கிபத்துல் கரீம்:– கட்சியின் தேசிய மாநாடில் கட்சியின் செயல்லாளர் வருகை தந்திருக்கவில்லை. தவிசாளர் முதலாவது அமர்வில் உட்கார்ந்து சென்ற பிறகு இரண்டாவது அமர்வில் தலைவரினால் மிகவும் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார் என்பது ஒரு புறமி்ருக்க… அப்படி மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றிருந்தால்?? கடந்த ஒகஸ்ட 23ம் திகதி இடம் பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டமானது ஏன் பித்னாவில் முடிவடைய வேண்டும் என்பதே எனது கேள்வி…

கேள்வி:- அண்மைக்காலமாக சாய்ந்தமருதிலிருந்து கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த ஜமீல் மற்றும் நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசோடு இணைந்திருக்கின்ற நிலையில் மீண்டும் சீராஸ் மீராசாஹிப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணையப்போவதாக பேசப்படுகின்றதே?

கிபத்துல் கரீம்:- தென்கிழக்கு பல்கலை கழகம் உறுவாக்கப்படுவதில் இருந்தும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் பெரும் தலைவர் அஸ்ரஃப் அவர்களுடனும் தற்போதை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீமுடனும் தோளோடு தோள் நின்று கட்சிக்காக அரும் பாடுபட்டவர் ஜெமீல்.

அவரையே கட்சியின் தலைமையானது தூக்கி எறிந்து விட்டது. இந்த நிலையிலேயே கொள்கை இல்லாமால் நாளுக்கு நாள் கட்சியினை மாற்றிக் கொண்டு திரிகின்றவரும் முஸ்லிம் காங்கிரசின் ந்தலைமையினை பகிரங்கமாக விமர்சித்த்வரும், முன்னாள் கல்முனை மேயருமான சிராஸ் மீராசாஹிப்பிற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை எந்த அளவிற்கு மறியாதை கொடுத்து கட்சிக்குள் உள்வாங்க இருக்கின்றது என்பதுதான் எனது நகைப்பிற்கான கருத்தாக இங்கே கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

மேலூம் என்னால் அல்-ஹாஜ் கிபத்துல் கரீமிடம் கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவரினால் அளிக்கப்பட்ட விரிவான பதில்களின் காணொளியானது எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Web Design by The Design Lanka