சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் சம்பந்தமான முக்கிய அறிவித்தல்..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் சம்பந்தமான முக்கிய அறிவித்தல்..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

கொரோனா எனும் கொடிய நோய் உலகெங்கும் பல இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. அண்மைக்காலமாக கர்ப்பிணித் தாய்மாரும் மரணிப்பது வேதனையான விடயமாகும். எமது ஊரில் இதுவரை 04 பேர் இக் கொடிய கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணித்தவர்களுள் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், எமது தாய், தந்தை, பாட்டன், பாட்டி போன்ற முதிய உறவுகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் கொடிய கொரோணாவிலிருந்து பாதுகாத்து கொள்ள உரிய தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ள முன்வருவோம். இதுவரையில் உலகலாவிய ரீதியிலும் சரி எமது நாட்டிலும் சரி ஏராளமானோர் இத்தடுப்பூசியினை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இதுவரைக்கும் பதிவு செய்யப்படவில்லை. அந்த வகையில் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியினை பெற்றுக் கொள்வோம்..

“கொடிய கொரோணாவிலிருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி ஒன்றே மிகச் சிறந்ததும் பாதுகாப்பு மிக்கதுமான வழியுமாகும் எனவே அருகிலிருக்கும் உங்களது கிராம சேவை உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு உங்களது பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். அவ்வாறு பதிவு செய்து கொள்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team