சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசலில் மீலாத் தின நிகழ்வுகளும், மரநடுகையும் ! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசலில் மீலாத் தின நிகழ்வுகளும், மரநடுகையும் !

Contributors

நூருல் ஹுதா உமர்

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாதுன் நபி விழாவினை ஒட்டி மீலாதுன் நபி தினத்தன்று பள்ளிவாசல்களை மின் குமிழ்களினால் அலங்கரிக்குமாறும், அந்த தினத்தை சிறப்பிக்குமுகமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நரநடுகையில் ஈடுபடுமாறும், மீலாதுன் நபி விழா தொடர்பிலான பதாதைகளை காட்சிப்படுத்துமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அது தொடர்பிலான விசேட வைபகம் சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஏ.ஹிபத்துள் கரீம் தலைமையில் சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது.

மீலாதுன் நபி விழா தொடர்பிலான பதாதைகளை காட்சிப்படுத்தி, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நரநடுகையும், நபிகளாரின் வாழ்க்கை தொடர்பிலான விசேட உரையும் துஆ பிராத்தனையும் இதன் போது இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team