சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் துஆ பிராத்தனை - Sri Lanka Muslim

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் துஆ பிராத்தனை

Contributors


நூருள் ஹுதா உமர்.
அண்மையில் காலமான சாய்ந்தமருது ஜும்மா பெரிய
பள்ளிவாசலின் பிரதான நிர்வாகி வை.எம். ஹனிபா அவர்களின் நினைவாக துஆ பிரார்த்தனையும், நினைவுரையும் இன்று(12) மாலை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பதில் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீமின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டு நினைவுரை நிகழ்த்தினார். மேலும் வக்பு சபை உறுப்பினரும், தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவருமான டாக்டர் ஏ. உதுமாலெப்பை, இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், சாய்ந்தமருது உலமா சபை தலைவர் மௌலவி ஏ.ஏ. சலீம் (சர்கி), கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், உலமாக்கள், வர்த்தகர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், வை.எம். ஹனிபா அவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) துஆ பிரார்த்தனையை நிகழ்த்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team