சாய்ந்தமருது தோனா ஆற்றின் இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் - Sri Lanka Muslim

சாய்ந்தமருது தோனா ஆற்றின் இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம்

Contributors
author image

Aslam S.Moulana

சாய்ந்தமருது தோனா ஆற்றின் இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் ஒன்று, இன்று திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.

 

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது தோனாவை வெகுவாக அழகுபடுத்தி பொது மக்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மாற்றியமைப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

 

சாய்ந்தமருது தோனாவை ஆழமாக்கி சுத்தப்படுத்தும் முதல் கட்ட பணிக்கு 13 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போது அதன் இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டத்திற்காக சுமார் 20 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது என அதன் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.ஜெசூர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

 

தமது வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது தோனா அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், நிதிப் பங்களிப்புக்காக முன்னின்று பாடுபட்ட கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள இணைப்பாளர் எம்.எம்.ஜெசூர் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.

 

அதேவேளை சாய்ந்தமருது தோனா ஆற்றின் நவீன அபிவிருத்தித் திட்டத்திற்காக கல்முனை மாநகர முதல்வரின் வேண்டுகோளின் பேரில் ஜப்பான் உதவ முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், கணக்காளர் எச்.எம்.எம்.றசீட், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி லக்மால், சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஏ.மஜீத், கல்முனை கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் கே.எஸ்.செல்வராசா, நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் எம்.சி.எம்.சி.முனீர், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பதில் தலைவர் யூ.எல்.எம்.காசிம், செயலாளர் அப்துல் மஜீத், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.

07

 

09

 

10

Web Design by Srilanka Muslims Web Team