சாய்ந்தமருது: நீரில் மூழ்கி வபாத் ! - Sri Lanka Muslim
Contributors

கல்முனை – சாய்ந்தமருது பிரதேச களப்பில் சிறுவன் ஒருவனின் ஜனாஸா  மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (05) சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த மீரா சாகிப் ரஷீத் என்ற 17 வயது சிறுவனின் ஜனாசாவே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் கடந்த 3ம் திகதி தோனியில் சென்றுள்ளார். இதன்போது தோனி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் ஜனாஸா  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team