சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 125 ரூபாவுக்கு சீனியை பெற மக்கள் திரண்டனர் ! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 125 ரூபாவுக்கு சீனியை பெற மக்கள் திரண்டனர் !

Contributors

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்டுறவு கடைகளில் தற்போது 125 ரூபாவுக்கு சீனி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 125 ரூபாவுக்கு சீனியை கொள்வனவு செய்வதற்காக அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் சுகாதார நடைமுறைகளை பேணி நீண்ட வரிசையில் காத்திருந்து சீனி கொள்வனவு செய்ததை காண முடிந்தது.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி மற்றும் கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. உதயராஜா போன்றோரின் உதவியுடன் கல்முனை பிராந்திய கூட்டுறவு சங்கங்களுக்கு 15000 கிலோகிராம் சீனி வழங்கப்பட்டுள்ளதுடன் சாய்ந்தமருது ப. நோ. கூட்டுறவு சங்கத்திற்கு 1500 கிலோ சீனி கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் சாய்ந்தமருது ப. நோ. கூட்டுறவு சங்கத்தலைவர் ஏ.உதுமாலெப்பை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து சீனி விற்பனை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team