சாய்ந்தமருது பிரதான வீதியில் ஒருவரின் சடலம் மீட்பு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது பிரதான வீதியில் ஒருவரின் சடலம் மீட்பு..!

Contributors

– பாறுக் ஷிஹான் –

தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை  ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில்  கடந்த செவ்வாய்க்கிழமை(13) இரவு    இனந்தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களின் தகவலின் பிரகாரம் கல்முனை   பொலிஸாரினால் குறித்த சடலம்   மீட்கப்பட்டிருந்தது.

சுமார் 65 முதல் 70 வரையிலான வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலைசெய்யப்பட்டதா அல்லது இயற்கை மரணமா   என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்  சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை கல்முனை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தனியார் கடைதொகுதியானது தனியார் வங்கியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் மரணமடைந்தவர் காவலாளியாக நியமிக்கப்பட்டவர் எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய குறித்த சடலம்  தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய குறித்த வங்கி நிருவாகத்தின் உதவியை   பொலிஸார் நாடியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team