சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக சி.எம்.எம்.சப்னாஸ் தெரிவு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக சி.எம்.எம்.சப்னாஸ் தெரிவு..!

Contributors

நூருல் ஹுதா உமர், ஹிஸாம் ஏ பாபா

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பிரதேச சம்மேளன கூட்டம் சாய்ந்தமருது இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்ட போது சாய்ந்தமருது பிரதேச சம்மேளன புதிய தலைவராக பிளையிங் கோர்ஸ் இளைஞர் கழக தலைவரும் குரு ஊடக வலையமைப்பின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சி.எம்.முஹம்மட் சப்னாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி முபாரக் அலி மற்றும் சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.டீ.எம். ஹாறூன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். றிஹான் மற்றும் சாய்ந்தமருது கிராம பிரிவுக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர், செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team