சாய்ந்தமருது பிரதேச செயலக நிகழ்வு ! - Sri Lanka Muslim
Contributors

(நூருல் ஹுதா உமர்)

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடந்த பல வருடங்களாக நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடமை புரிந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.ஜஃபர் அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (17) அக்கறைப்பற்றில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team