சாய்ந்தமருது பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர் நட்புறவு ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர் நட்புறவு ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர் நட்புறவு ஒன்றியத்தினால் வறிய மற்றும் பயணத்தடையினால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

2020/2021 ஆம் ஆண்டின் வழங்கப்பட்ட 60,000 பட்டதாரிகள் நியமனம் வழங்கும் திட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இணைப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் பங்களிப்பின் மூலம் சாய்ந்தமருது பிரதேசத்தில் 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பயிலுநர் நண்பர் ஒன்றியத்தினால் பொதிகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team