சாய்ந்தமருது பெண்ணின் ஜனாஸா எரிக்கப்படுமா...? » Sri Lanka Muslim

சாய்ந்தமருது பெண்ணின் ஜனாஸா எரிக்கப்படுமா…?

Contributors
author image

A.H.M.Boomudeen

சாய்ந்தமருது – பொலிவேரியன் பின்பக்கமாகவுள்ள வீடொன்றில் வசித்து வந்த – நெய்னா முஹம்மது ஆசியா உம்மா நேற்று காலமானார்.

67 வயதான – அந்தப் பெண் வயிற்றுப் போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

முதல் கட்ட Antigen பரிசோதனையில் – கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . எனினும் இச் செய்தி எழுதும் வரை – அதன் முடிவு கிடைக்கப்பெறவில்லை.

ஆனால்,
– PCR Test இன் முடிவு , Positive இற்கே சாதகம் எனப்படுகிறது. என – இப்பெண்ணின் ஜனாஸா தற்போது வைக்கப்பட்டுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மட்டுமன்றி , இது விடயத்தில் – இதற்குமேல்
எம்மால் எதுவுமே செய்ய முடியாது என கையும் விரித்து விட்டார்கள் வைத்தியர்கள் என்ற துயரச் செய்தி பெரும் கவலையை மேலும் தோற்றுவித்துள்ளது.

நம்பகமான தகவல் ஒன்றின் படி – இன்று , குறித்த பெண்ணின் ஜனாஸா – தகனத்துக்காக அம்பாரை நகருக்கு எடுத்து செல்லப்படவிருப்பதாக அறியக் கிடைத்தது.

மிகவும் ஏழ்மையான இந்தப் பெண் – கணவனை இழந்தவர். இரு பிள்ளைகளின் தாய் எனக் கூறப்படுகின்றது.

மனச்சாட்சி – மனிதாபிமானம் உள்ளவர்களே :- இந்த ஜனாஸா – எரிக்கப்படாமல் தடுக்க என்ன வழி வகைகள் உள்ளன என்று அவசரமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் – இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது.

Web Design by The Design Lanka