சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரின் அனுசரணையில் நிவாரணப்பணி..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரின் அனுசரணையில் நிவாரணப்பணி..!

Contributors

நூருள் ஹுதா உமர்

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வரும் அனர்த்த நிவாரண நிதியத்திற்கு சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரின் அனுசரணையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உலருணவுகள் நேற்றிரவு (19) பொத்துவிலில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையிலான குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான அனர்த்த நிவாரண நிதியத்திடம் பொத்துவில் மக்களுக்கான உலருணவுகளை வழங்கி வைத்ததுடன் இனிவரும் காலங்களில் ஏனைய பிரதேசங்களுக்கும் உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் இந்நிகழ்வில் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபின் தாமாக முன்வந்து எங்களின் அனர்த்த நிவாரண நிதியத்திற்கு பல லட்சம் பெறுமதியான உலருணவுகளை வழங்கி வைத்த சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் அவர்களுக்கும் இதற்காக பின்னணியில் உடல் ரீதியாக உழைத்த எல்லோருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் இவர்களின் வாழ்வில் எதிர்காலத்தில் பல சிறப்புகளை அடைய பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team