சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் மஜ்மா நகரில் நிவாரணப்பணி..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் மஜ்மா நகரில் நிவாரணப்பணி..!

Contributors

நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உலருணவுகள் பல இடங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோணா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமைந்துள்ள வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரணம் இன்று பகல் வழங்கி வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று மக்களுக்கான உலருணவுகளை வழங்கி வைத்ததுடன் இனிவரும் காலங்களில் ஏனைய பிரதேசங்களுக்கும் உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் இந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மௌலவி எம்.ஐ.எம். ஹாமீத், ஏ.சி. அஸீஸ், அல்- ஹிம்மா அமைப்பின் தலைவர் ஹாரூன் மௌலவி, மஜ்மா நகர் அபிவிருத்தி குழு உறுப்பினர் எஸ்.டி.எம். சலாஹுதின் உட்பட பலரும் கலந்து கொண்டு இந்நிவாரணப்பணியை முன்னெடுத்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் பிரதிநிதிகளும், பிரதேச பொதுமக்களும் எங்களின் நிலையறிந்து எங்களின் பசிபோக்க முன்வந்து பெறுமதியான உலருணவுகளை வழங்கி வைத்த சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் அவர்களுக்கும் இதற்காக பின்னணியில் உடல் ரீதியாக உழைத்த எல்லோருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் இவர்களின் வாழ்வில் எதிர்காலத்தில் பல சிறப்புகளை அடைய பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team