சாய்ந்தமருது: விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு » Sri Lanka Muslim

சாய்ந்தமருது: விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு

????????????????????????????????????

Contributors
author image

M.S.M.ஸாகிர்

ஸ்ரீலங்கா மெகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஹுபறின் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய BRIDGE THE GAP, ASKING AND ANSWERING – 1, ASKING AND ANSWERING – 2, எனும் தலைப்பிலான 3 ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயளாளர் ஏ. எல். எம். சலீம், கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல்கள் பற்றிய விமர்சனங்களை அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரி உதவி பீடாதிபதி எம்.ஏ.கலீல் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலாசிரியருக்கு அவரது உறவினராலும் பல்கலைக்கழக சகாக்களாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஏற்பாட்டாளர்களால் ஞாபகச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் துணைவியார் றிப்கா அன்ஸார் பெற்றுக்கொண்டார்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

6

Web Design by The Design Lanka