சாய்ந்தமருது BBQ சங்கத்தினால் விளையாட்டு உபகரணம் கையளிப்பு » Sri Lanka Muslim

சாய்ந்தமருது BBQ சங்கத்தினால் விளையாட்டு உபகரணம் கையளிப்பு

s66

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

மாளிகைக்காடு ரியல் பவர் விளையாட்டுக் கழகத்திற்கு சாய்ந்தமருது ஏ.வீ.எஸ் மார்க்கடிங் நிறுவனத்தின் பணிப்பாளாரும், BBQ சங்கத்தின் உறுப்பினருமான தொழில்அதிபர் ஏ.ஏ.அஸ்ரப் அலியின் 40 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது BBQ சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது தொழில்அதிபர் சிபான் முகம்மட், அக்கரைப்பற்று பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.எல்.நிஜாமுடீன், கல்முனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர் எம்.சி.எம்.ஷம்சுல்முனா, மாளிகைக்காடு ரியல் பவர் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எஸ்.எம்.றிஸ்னி, BBQ சங்கத்தின் உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

s s-jpg2 s-jpg2-jpg3

Web Design by The Design Lanka