சாய்ந்தமருதைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான அலியார் முஸம்மில் காலமானார். - Sri Lanka Muslim

சாய்ந்தமருதைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான அலியார் முஸம்மில் காலமானார்.

Contributors
author image

ஹாசிப் யாஸீன்

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிற்கு செல்வதற்காக நேற்று கொழும்பு சென்றிருந்தார். இன்று காலை அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் தனது 76வது வயதில் காலமானார்.

 

இவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணிக்கு அவரது சொந்த ஊரான சாய்ந்தமருதில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

 

மர்ஹூம் அலியார் முஸம்மிலினை கல்முனைப் பிரதேசத்தில் சிங்கள மாத்தயா என்று செல்லமாக அழைப்பார்கள்.

 

இவர் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருமாவார்.

 

இதன்பின்னர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சிங்கள பாடத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

நீதியமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் அரச சிங்கள மொழி பெயர்ப்பாளராவும் கடமையாற்றியவராவார்.

 

மூத்த ஊடகவியலாளாரான மர்ஹூம் அலியார் முஸம்மில் அம்பாறை மாவட்ட செய்திகளை சிங்கள மொழிப் பத்திரிகைகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

இவரது மரண செய்தி கேட்டு  அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது 

Web Design by Srilanka Muslims Web Team