சிக்கலில் மாட்டிக் கொண்ட வீராட் கோஹ்லி - Sri Lanka Muslim

சிக்கலில் மாட்டிக் கொண்ட வீராட் கோஹ்லி

Contributors

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த வீராட் கோஹ்லி சிக்கலில் மாட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் வீராட் கோஹ்லி(857 புள்ளிகள்) முதலிடத்திலும், டிவில்லியர்ஸ்(849) 2வது இடத்திலும் உள்ளனர்.

இருவருக்கும் இடையே 8 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21ம் திகதி தொடங்குகிறது.

அதேசமயம் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நவம்பர் 24ம் திகதி தொடங்குகிறது.

இத்தொடர்கள் முடியும் தருணத்தில் வீராட் கோஹ்லிக்கும், டி வில்லியர்சுக்கும் தரவரிசையில் முதலிடத்தைப் பெறுவதில் போட்டி ஏற்படலாம் என தெரிகிறது.

இதற்கு காரணம் இருவரும் தற்போது நல்ல பார்மில் உள்ளனர்.

சமீபத்தில் முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வீராட் கோஹ்லி அசத்தினார் என்றால், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் டிவில்லியர்ஸ் வெளுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team