சிங்கராஜ வன அழிவுக்கு பின்னால் இருப்பது சீனா? - Sri Lanka Muslim

சிங்கராஜ வன அழிவுக்கு பின்னால் இருப்பது சீனா?

Contributors

சிங்கராஜ வனத்திற்கு அருகாமையில் இரண்டு குளங்களை அரசாங்கம் அமைப்பதாகக் கூறினாலும் அதனூடாக பெறப்படும் நீர் சீனப் பிரஜைகளின் தொழிற்சாலைகளுக்கே வழங்கப்படும் என்கிற பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரைநிகழ்த்திய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக, பிட்டதெனிய, கொட்டபொல, நிள்வலா, கிங்கங்கை போன்ற பிரதேசங்களில் இந்த நீர்த்திட்ட விநியோக முயற்சி எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக, 80 வீத நீர், சீனர்களின் தொழிற்சாலைகளுக்கும், மிகுதியான 20 வீத நீர் விவசாயிகளுக்கும் வழங்குவதே இந்தத் திட்டத்தின் உள்நோக்கம் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team