சிங்கார தோப்பில் அதிரடியாக நுழைந்த சுகாதாரத் துறையினர், அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை..! - Sri Lanka Muslim

சிங்கார தோப்பில் அதிரடியாக நுழைந்த சுகாதாரத் துறையினர், அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை..!

Contributors

எஸ் ஜே புஹாது

நிந்தவூர் அட்டப்பள்ளம் சிங்காரத்தோப்புக்குள் பி சி ஆர் பரிசோதனைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி பறூசா நக்பரின் ஆலோசனைக்கு அமைய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறி இப் பிரதேசத்துக்குள் மக்கள் குழு குழுவாக சென்று வருவதால் கொரோணா தொற்று பரவல் நிலைமை அதிகரிக்கக் கூடும் என்ற அபாய நிலைமையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இன்று மாலை வேளையில் சிங்காரத்தோப்புக்குள் பிரவேசித்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் அங்கிருந்து வெளியேற முடியாத வண்ணம் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team