சிதறிய சிவப்புப் பூக்கள்.. » Sri Lanka Muslim

சிதறிய சிவப்புப் பூக்கள்..

sri

Contributors
author image

Junaid M. Fahath

(காத்தவூர்க்கவி
பஹ்த் ஜுனைட்)


மனச்சாட்சி இல்லா மனித மாமிசம்
சுவைக்கும் அரக்கனின் கூட்டம்
சிரியா தேசத்தின் சிட்டுகளை சுட்டு
புதைக்கிறது சற்றும் உணர்வில்லாமல்..

சின்னக் குழந்தைகள் சிதறுவதை
உணர்ந்து கொள்ள நேரமில்லாமல்
உதைபந்து விளையாட்டில் ஊறிப்போகும்
அரபிய தேசம் அரக்கனை விட மோசம்…

பால் போன்ற மேனி கொண்ட பச்சிளம்
குழந்தைகள் செய்த பாவம் அறியாது
துப்பாக்கி முனையில் முண்டமான
உடலாய் சிவந்து போய் கிடக்கிறது
சிரியா தேசத்தின் வரலாறு..

ஊடகங்களும் ஊமையாகி நிற்கிறது
உண்மையை உலகத்திற்கு
உரக்கக் சொல்ல..

ஐ.நா சபையும் வாய்மூடி உறங்கிக்
கொள்கிறது அரக்கனின் அவதாரம்
அவதானித்து பயனில்லாமல்..

கேட்பதற்கு யாரும் இல்லை
உதவுவதற்கு யாரும் இல்லை
அல்லாஹ் ஒருவனை தவிர..

தூர தேசத்தில் இருந்து அழுகிறேன்
என் குடும்ப உறவின் ஷஹீது கண்டு.
உங்களுக்காய் செய்வதற்கு பிரார்த்தனை
தவிர்ந்து வேறு எதுவும் இல்லை
என் கரம்களில்..

வலிகளும் வேதனைகளும் நிறைந்த
உங்கள் பயணம்  இறுதிப் பயணம் அல்ல
சுஹதாக்களின் சுகமான வாழ்வின்
துவக்கப் பயணம் அதுவே
வெற்றிப் பயணம்.

சந்திப்போம் கலிமா மொழிந்த
நாம் எல்லோரும் முஹம்மதின்
வாரிசுகளாய் சுவனத்தின் சிட்டுகளாய் சேர்ந்து வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்..

Web Design by The Design Lanka