சித்திரைப் புத்தாண்டில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் சோதனை! - Sri Lanka Muslim

சித்திரைப் புத்தாண்டில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் சோதனை!

Contributors

தமிழ் சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதால் இலங்கையில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் கடுமையான எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 2019 இல் 440 அமெரிக்க டொலராக இருந்த எரிவாயுவின் விலை பிப்ரவரி மாத இறுதியில் உலக சந்தையில் 604 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

எனவே 12.5 கிலோ எரிவாயுக்கு 770 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலிண்டரின் தற்போதைய விலையை ரூ .1,493 ஆகும். எனினும் இதை 2,148 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்கள் கோரியதற்கு அரசாங்கம் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் விலை அதிகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team