சினோபாம் 2 டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் 3ஆவது டோஸாக பிறிதொரு தடுப்பூசியைப் பெற வேண்டும் - இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை..! - Sri Lanka Muslim

சினோபாம் 2 டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் 3ஆவது டோஸாக பிறிதொரு தடுப்பூசியைப் பெற வேண்டும் – இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை..!

Contributors

இரண்டு டோஸ் சினோபாம் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸாக பைசர் அல்லது மொடர்னா அல்லது அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றைச் செலுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை களிலும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருப்பதாகவும் சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நூற்றுக்கு 7 வீதமா னோருக்கு அந்த நிலைமை இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அஸ்ட்ரா செனெகா, பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டோருடன் ஒப்பிடுகையில், சினோபாம் தடுப் பூசியை பெற்றுக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணம் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் வீதம் ஆகியன அதிகமாகக் காணப்படுவதாக பஹ்ரைனில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளை மேற்கோள் காட்டி, இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

சினோபாம் தடுப்பூசியைப் பெற்ற 60 வயதுக்குக் குறைந்தவர் களுக்கு அது நன்றாக செயல்திறனைக் காட்டுகிறது எனவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் குறைந்த அளவில் செயல்திறனைக் காட்டுகிறது எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக பேராசிரியர் நீலிக்கா மாளவிகே தலைமையிலான ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சினோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு அதிகமாக உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது.

மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் உடல் ரீதியாகப் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் , 02 சினோபாம் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் இவர்கள் பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளில் ஒன்றை மூன்றாவது தடுப்பூசியாகச் செலுத்துமாறு அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு 18 முதல் 60 வயதுக்கிடைப்பட்ட தீவிர நோய் அல்லாதவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

12 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட நோய் நிலைமையுள்ள வர்களுக்கு இரண்டு பைசர் தடுப்பூசியை வழங்குமாறும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

முதலாவதாக ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திய பின் இரண்டாவது டோஸாக அத்தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியாதவர்கள் அஸ்ட்ரா செனெகா, பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை செலுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team