சின்னப் பிள்ளைதானே..! தாய் தந்தையர்கள் சிந்திக்க வேண்டியது..! - Sri Lanka Muslim

சின்னப் பிள்ளைதானே..! தாய் தந்தையர்கள் சிந்திக்க வேண்டியது..!

Contributors
author image

Editorial Team

ஸ்கோலர்ஷிப் க்லாஸ் போகும் இரண்டு பெண் பிள்ளைகள் அந்தக் கடையில் பெக்கட் ஐஸ் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அதில் ஒரு சிறுமி சற்று வளர்த்தி கூடியவராக இருந்ததோடு அந்த வயது சின்னப் பிள்ளைகள் அணியும் குட்டை கவுன் ஒன்றை இறுக்கமாக அணிந்து இருந்தது அவரது வளர்த்திக்கு அவ்வளவு பொறுத்தமாக இருக்கவில்லை.

அந்த பெட்டிக்கடை மாமாவும்
பிள்ளைகளை பொருளைக் கொடுத்து வெளியில் அனுப்பாமல், எதேதோ கூறி வேலை வாங்கிக் கொண்டிருந்தார். குறிப்பாக அந்த வளர்த்தி கூடிய பிள்ளையுடனே அதிகம் கொஞ்சி குனிந்து நிமிரும் வேலைகளை வாங்கிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தின் பின் அந்த பெக்கட் ஐஸ் இனை எடுத்து விளையாடுவதைப் போல் அவளது கன்னத்தில், மூக்கில், கழுத்தில் என்று கூதல் வைப்பதும், அவள் அருகில் வந்து விளையாட்டு காட்டும் சாக்கில் அவளது அங்கு இங்கு கையை வைபதையும் தெளிவாக உணர்ந்து கொண்ட நானும் என் நண்பர்கள் இருவரும் நேராக அந்தக் கடைக்குள் சென்றோம்.

எம்மைக் கண்டதும் கஸ்ட்டமர் வந்த மகிழ்ச்சி கூட அவரது முகத்தில் இல்லை, ஐஸ் இனை கையில் வைத்துக்கொண்டே “என்ன வேனும்” என்று எரிச்சல் கலந்த குறலில் கேட்க,

“ஐந்த ஐஸ் அ அந்த பிள்ளைட்ட குடுத்து அனுப்பி வைங்க, பிள்ளை கடைக்கு வந்து 10 நிமிஷத்துக்கும் மேலாகுது” என்ற போது, அவருக்கு கொஞ்சம் தடுமாற்றம்,

அதற்குள் பக்கத்தில் இருந்த நண்பன் பலார் என்று அவரது கன்னத்தில் ஒன்றை விட்டு “ஐஸ் அ கொடுத்து பிள்ளைய அனுபுடா , கடைக்கு வார பிள்ளைகள அங்க இங்க தொடுர வேல வெச்சி கொள்ளாத, சாமன் வாங்க வந்தா சாமன கொடுத்து அனுப்பி வை”

என்று கூற அவரால் மறு பேச்சு பேச முடியவில்லை, “இல்ல சின்னப் புள்ள….”
எதோ சொல்ல வந்தவர் கன்னத்தில் இன்னும் ஒரு அரையைப் போட்டு, “ஓ அந்த பிள்ளைய குனிய வெச்சு நீ எத பாத்தாய், எங்க தடவினாய் எண்டு எல்லாம் எங்களுக்கு தெரியும், இது மொதலும் கடைசியுமா இருக்கனும்” என்று கூற,

என்ன நடக்கிறது என்பதை அறியாத அந்த சிறுமிகள் திகைத்து நின்றனர், “ஒண்டும் இல்லம்மா ஒங்கட வீடு எங்க இருக்கு?” என்று கேட்டு அந்த வளர்த்தியான பிள்ளையிடம் கேட்க,

இருவரும் பக்கத்து பக்கத்து வீடாக இருந்தனர். நேராக அந்தப் பிள்ளையின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டியபோது அவளது தாய் வந்து கதவைத் திறந்தார்.

புள்ளட வாப்பா வெளிநாட்டில் என்பதால்
“சின்ன பிள்ளை எண்டு இப்பிடி இறுக்கி, குட்டையா உடை உடுத்தி அனுப்பி வெச்சி இருக்குறீங்க, அதுவும் இந்த பிள்ளை வயதை மீறிய வளர்ச்சியில் இருப்பதைக் கூட உணராத தாயாக இருக்க வேண்டாம்”,

ரோட்டுல போற கிழவனும், கடைக்கரனும் , படிப்பிக்கிற மாஸ்ட்டர் மாறும் மட்டுமில்ல வீட்டுகுள்ள, குடும்பத்துகுள்ள இருக்குற சாச்சி, பெரியம்மாட பொடியன் மார்குட சில நேரம் உங்கட புள்ளைய சிதைச்சு போட்டுறுவான்கள் என்று நடந்ததையும், சொல்ல வேண்டியதையும் நேரடியாக அவரிடமே கூறி விட்டு வந்து விட்டோம்.

( மேலே இருக்கும் வசனத்தை கேட்டு நல்லவர்கள் உணர்ச்சி வசப்படவேண்டியதில்லை. அதுப்யார் யாருக்கு உரைகிறதோ அவர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம் சரிங்களா )

 

இந்த சம்பவம் நடந்து
20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதே போல் சில காலங்களுக்கு முன் என் உறவினர் ஒருவரின் பதின் மூன்று வயது மகன், அவரது வீட்டினுள் தன் சாச்சியின் 08 வயது மகளுடன் விளையாடுகிறோம் என்று கூறிக் கொண்டு,வேறு எதையோ செய்ய எத்தனிப்பதையும்,

அந்தச் சிறுமியும் அதற்கு எதிர்ப்புக்காட்டாமல் இருப்பதையும் வேறு வேலையாக அந்த இடத்திற்கு வந்த சமயம் அவதானித்த அவனது தகப்பன் அவனைப் பிடித்து நையப்புடைத்து எடுத்து விட்டார்.

சிறி நேரம் சென்று அவனது தொலை பேசியை எடுத்து பார்த்தபோது, அதில் இருந்த ஆபாசங்களின் எச்சத்தை அவதானித்து மனம் நொந்து போய் ஹார்ட் அட்டக் வந்து மரணித்துப் பிழைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

அன்று கொடுத்த அடியிலும் தகப்பனின் நோயின் பயங்கரத்திலும் பயந்து போன அந்த சிறுவன் மாறி விட்டான் என்று நம்பும் அளவு நல்ல மாற்றங்களை அவனிடம் அவதானிக்க முடிந்தாலும் அவனை முழுதாக நம்புவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.

அந்த சிறுமியிடம் முறையாக கேட்டபோது “அது தான் முதல் தடவை, டாக்டர் விளையாட்டு விளையாடவே நான் கட்டிலில் படுத்து இருந்தேன்” என்று கூறினாலும்,

அவள் மீதான அவதானத்தை அந்த பெற்றோர் அதிகரித்து விட்டனர். அவர்கள் தவறு விட்ட இடமும் ஏண்ட மகள் சின்னப் பிள்ளை தானே, குடும்பத்திற்குள் இருக்கும் பிள்ளைகள் தானே, என்று பிள்ளைகள் மீது கவனத்தை விட்டு விட்டதும், அவளது ஆடை விடயத்தில் கோட்டை விட்டதும் கதையில் மூழ்கிக் கிடந்ததும் தான்.

இந்த இரு சம்பவங்களையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் கால ஓட்டத்தின் மாற்றம் முன்பு இருந்த பெரியவர்களை விடவும் இப்போது இருக்கும் சிறு பிள்ளைகளில் பலர் ஆண், பெண் என்ற இருவருக்கும் இடையில் என்ன விடயங்கள் உள்ளது என்பதை,

அவர்கள் வயதுக்கும், தேவைக்கும் மீறிய விதத்தில் அதிலும் குறிப்பாக சொந்தத் தாயைக் கூட விட்டு வைக்காத அளவு வக்கிரமமான முறையில் கூட அறிந்து வைத்த மனித மிருகங்களாக அலைந்து கொண்டுள்ளனர் என்பதை மறக்கக் கூடாது.

இந்த ஆபாசம் என்ற விடயத்தை சர்வசாதரமாக ஜோக், மீம்ஸ், பாடல், படங்கள் முதல் ஆபாசப்படங்களைக் கூட கைத் தொலைபேசியில் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கொரோனாவின் பின் நன்றாகவே வந்து விட்டது.

இதற்கு ஆண் பிள்ளைகள் போல் பெண் பிள்ளைகளும் விதிவிலக்கு அல்ல என்பதை நாம் மறக்கக் கூடாது. வாலிப வயதை உடையவர்களைப் போலவே சிறு பிள்ளைகள் கூட சீரழிவுகளுக்கு உள்ளகியுள்ளனர்.

இதன் விளைவுகளாக தினமும் எமது வீட்டிற்குள் வரும் எமது உடன் பிறப்பின் பிள்ளைகள் மூலம் கூட நாம் சமையல், டீவி, போன் என மெய் மறந்து இருக்கும் நேரத்தின் ஒரு சில நிமிடங்களை பாவித்து,

தொடர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மூலம் எம் பிள்ளைகள் எம் வீட்டிற்குள் எதோ ஒரு மூலையில் அன்றாடம் சிதைக்கப்படலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது வீட்டிற்கு வெளியில் நடப்பதை விட அதிகமாக வீட்டிற்குள் இருப்பவர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், சாச்சா, பெரியப்பாவின் பிள்ளைகள் , அண்ணன், தங்கச்சி உறவு முறையில் வாழ வேண்டியவர்கள் போன்றவர்களால் தான் அதிகம் அதிகம் நடக்கிறது.

இந்த வரிகளை வாசிக்கையில் சிலரது மனம் குற்ற உணர்வால் கூனிக் குறுகலாம். இன்னும் சில சகோதரிகளுக்கு தமது மறைக்கப்பட்ட சிறு பிள்ளைக் காலம் நினைவில் வரலாம்.

இந்த விடயத்தில் ஆண் பிள்ளைகள் மீதும் கவனம் காட்டிடுங்கள். காரணம் ஓரினச்சேர்க்கை மூலமேனும் தமது இச்சையை தீர்க்கும் கொச்சையான பலர் இல்லாமல் இல்லை.

சிலர் ஆண்புள புள்ளகள ஒழுக்கமா வளக்கனும், அத உட்டு போட்டு பொம்புல புள்ளட உடுப்ப பாத்து, அத பாத்து, இத பாத்து எங்கட சுதந்திரத்த பறிக்கிற விதமா அவங்கள வளத்து உட்டு கதைக்க கூடாண்டு தத்துவங்களை பொழிய வரலாம்.

தாராளமாக பொழிந்து கொள்ளுங்கள் என்ன ஒன்று அந்த தத்துவதாரிகளால் சீரழிந்து, சிதைந்து போவோர் எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாமே அல்லாமல் அதற்கு நல்ல வழி காட்ட அவர்களால் முடியாது..

அதே போல் ஒழுக்கமாக இருப்பது என்றால் ஆண், பெண் இருவரும் அதனை வழிமுறைப் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

சுதந்திரம் என்று நல்லா இருப்பவனையும் தூண்டிவிடும் விதத்தில் தெரு வழியே சென்று வந்தால் அது சுதந்திரமும் கிடையாது,ஒழுக்கமும் கிடையாது. இந்த இடத்தில் ஆண், பெண் பாரபட்சம் இன்றியே துஷ்பிரயோகங்கள் அரங்கேறுகிரது என்பதையும் மறக்க வேண்டாம்!!

எனவே
பிள்ளைகள் தொலைபேசி, தொலைக்காட்சியில் எதனை பார்க்கிறார்கள், அவர்கள் சேர்ந்து விளையாடும்போது எதை விளையாடுகிறார்கள்,என்ன கதைக்கிறார்கள் என்பது முதல், அவர்களது ஆடை விடயம், அவர்கள் நெருங்கிப்பழகும் ஏனைய ஆன், பெண் நபர்கள் என அனைத்திலும் மீதான அவதானத்தை,

எமது வீடுகளுக்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் கூட மிகவும் அவதானத்துடன் இருந்திடுவோம். வளரும் வயதில் ஒரு பிள்ளை சிதைக்கப்பட்டால்,

அது மன ரீதியாக பாதிப்படையும், பெற்றோரை இரகசியமாக வேவு பார்க்கும், அவர்கள் வயதை உடைய ஏனையோருடன் இதை செய்ய முனைவார்கள், பருவ வயது வந்த பின் இன்னும் சிலரை அவர்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள், ஓரினச்சேர்க்கை போன்ற விடயங்களுக்கு அடிமையாவார்கள், திருமணம் முடிக்கப்பயப்படுவார்கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லக் கூடிய சமூக சீரழிவுகளை எதிர்கொள்ள வரும்…..

தொடரும்…….

இது போன்ற ஆக்கங்களை
சமூகப் பொறுப்பும், சில விடயங்களின் தன்மைகளையும் உணர்ந்த மன முதிர்ச்சியடைந்தவர்களால் மாத்திரமே செயார் செய்யகும், நாகரீகமாக எதிர்கொள்ளவும் முடியுமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team