சிம்பாவேயை விட மோசமான நிலைக்கு இலங்கை செல்லும் என எதிர் கட்சித் தலைவர் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

சிம்பாவேயை விட மோசமான நிலைக்கு இலங்கை செல்லும் என எதிர் கட்சித் தலைவர் எச்சரிக்கை..!

Contributors
author image

Editorial Team

தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன் ஊடாக நாட்டின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

சிம்பாப்வேயின் நிலைக்குள் படிப்படியாக நாடு நகர்கிறது. இப்போது ரூபாய் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது டொலர் 202 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. போஹொட்டுவ எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்கள் அரசாங்கத்தின் போது ரூபாயின் மதிப்பு இவ்வளவு குறையவில்லை என்பது எனக்கு நினைவிருக்கிறது.

திறமையின்மை பற்றி பேசினார்கள், ​​நான் கேட்க விரும்புகிறேன், டொலருக்கு எதிராக ரூபாய் 202 ஆக மதிப்பிடப்பட்டதா? அதுதான் தற்போதைய நிலைமை. மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.44 பில்லியன் அச்சிடப்பட்டது. இந்த பணம் எங்கே போகிறது? மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்டதா? அவ்வாறு எதுவும் பெறப்படவில்லை, ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக, அப்போது அளித்த சௌபாக்கியத்திற்கு வழிவகுக்கும் என வாக்குறுதியளித்த விடயம் இன்று மேற்கொள்ளப்படவிடல்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். “சௌபாக்கியத்தின் தொலைநோக்கு” ஆனால் அது அச்சிடப்பட்ட பணத்தின் செழிப்பு அல்ல, அது சிம்பாப்வேயின் செழிப்பு. சிம்பாவேயை விட நமது நாடு மிகவும் தீவிரமான பின்னோக்கிய சூழ்நிலையில் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவது குறித்து அரசாங்கம் ஏற்கனவே கவலை கொண்டுள்ளது என நிதி, மூலதன சந்தைகள் மற்றும் பொது நிறுவன சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஒரு தற்காலிக சம்பவம் என்றும், எதிர்காலத்தில் ரூபாயை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team