"சிரிப்பும் சிந்திப்பும் " நூல் வெளியீடு » Sri Lanka Muslim

“சிரிப்பும் சிந்திப்பும் ” நூல் வெளியீடு

bo.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சைபுதீன் எம் முஹம்மட்


எழுத்தாளர் A.T.இம்ரான்கான் எழுதிய “சிரிப்பும் சிந்திப்பும் ” நூல் வெளியீடு, செல்வன் T. உதயகாந்த் இன் இறுவட்டு வெளியீடு விழா வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பல்நோக்கு மண்டபத்தில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளருமான முத்து முஹம்மட் கலந்து கொண்டு நூல், இருவெட்டு ஆகியவற்றை வெளியிட்டு வைத்தார்.

இந்த நிகழவில் கௌரவ அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன், அமைச்சரின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வியியற் கல்லூரின் பீடாதிபதி சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூல் நயவுரையை விரிவுரையாளர் திரு. பார்த்தீபன், இறுவட்டு நயவுரையை விரிவுரையாளர் திரு.ஞனசம்பந்தன் ஆகியோரும் வழங்கினர்.

உப பீடாதிபதிகளான K.சுவர்னராஜா, S.பரமானந்தம், T.ஜயகாண்டீபன், இணைப்பாளர் கலீல் ஆகியோர் பிரதம விருந்தினரிடம் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

bo bo.jpg2

Web Design by The Design Lanka