சிரியாவின் போர் விமானத்தை ஐ.எஸ் சுட்டு வீழ்த்தியுள்ளது - Sri Lanka Muslim

சிரியாவின் போர் விமானத்தை ஐ.எஸ் சுட்டு வீழ்த்தியுள்ளது

Contributors
author image

World News Editorial Team

சிரியாவில் ஐ.எஸ்  பிடியில் உள்ள முக்கிய நகரமான அல்-ரக்கா மீது பறந்த சிரியா போர் விமானத்தை IS  சுட்டு வீழ்த்தியுள்ளனர். அந்நாட்டின் மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் இந்த விவரங்களை தெரிவித்துள்ளது.

 

IS ஆல் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த விமானம் மக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்ததாகவும், இதில் வீட்டில் குடியிருந்தவர்கள் யாரேனும் மரணமடைந்திருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் ஆணையம் மேலும் கூறியுள்ளது. இன்று இந்த போர் விமானம் IS இன் மறைவிடங்கள் மீது ஐந்து முறை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

அதே போல் அங்குள்ள டல் காமிஸ் என்ற நகரில் is க்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 14 ஐ.எஸ். இயக்கத்தினர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team