சிரியாவில் ISIS மீது குண்டு வீசிய அரபு நாட்டு பெண் விமானி - Sri Lanka Muslim

சிரியாவில் ISIS மீது குண்டு வீசிய அரபு நாட்டு பெண் விமானி

Contributors
author image

World News Editorial Team

ஈராக்கை தொடர்ந்து சிரியாவில் இஸ்லாமிய தேசம் பகுதியில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ மீது அமெரிக்கா தலைமையில் விண்வெளி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த பெண் விமானியும் இந்த குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளார். அவரது பெயர் மேஜர் மரியம் அல்– மன்சூரி (35).

 

இவர் கடந்த 2007–ம் ஆண்டில் அபுதாபியில் உள்ள கலிபாபின் ஷயத் விமான பயிற்சி கல்லூரியில் படித்து விமானி பட்டம் பெற்றவர். அதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளின் விமான படையில் முதல் பெண் விமானியாக பணியில் சேர்ந்தார்.

 

கடந்த 23–ந்தேதி நடந்த குண்டு வீச்சில் இவர் பங்கேற்றார். இத்தகவலை அவரது ஆதரவாளர்கள் படத்துடன் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். அவரது சேவையை பாராட்டியுள்ளனர்.

 

அதே நேரத்தில் பழமைவாதிகள் இவரது செயலை எதிர்த்துள்ளனர். இது கிரிமினல் நடவடிக்கை என கூறியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team