சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாஷணம் திருமதி மும்தாஜ் ஸறூக் காலமானார் - Sri Lanka Muslim

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாஷணம் திருமதி மும்தாஜ் ஸறூக் காலமானார்

Contributors
author image

A.S.M. Javid

மன்னார் மூர்வீதியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மும்தாஜ் ஸறூக் தனது 63வது வயதில் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

ஆரம்ப கால வீரகேசரி பத்திரிகையில் ஊடக தொடர்பாளராக இருந்த இவர் பின்னர் சுதந்திர ஊடகவியலாளராக காலமாகும் வரை இருந்து வந்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்து போரத்தின் வளர்ச்சிக்காகவும், ஊடக வளர்ச்சிக்காகவும் ஒரு பெண் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வந்தார். அரச கலாபூஷண விருதைப் பெற்ற இவர் வன்னி ஊடகத்தாரகை என்ற பட்டத்தையும் பெற்றிருந்தார்.

இரண்டு ஆண் பிள்ளைகளின் தயாரான இவரின் ஒரு புதல்வாரன மர்ஹூம் ஷெரீன் என்பவர் கடந்த சிலகாலங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக காலமானதன் பின்னர் தனது புதல்வரின் இழப்பையிட்டு மிகவும் மனமுடைந்த நிலையிலேயே அவர் இருந்து வந்தார். தற்போது தனது இளைய புதல்வாரன பர்ஸான் மற்றும் கணவர் அப்துல் ஸறூக் ஆகியோருடன் வசித்து வந்த நிலையிலேயே அவர் திடீர் மாரடைப்பால் காலமானார்.

ஜனாஸா தற்போது இலக்கம் 438, ஜா-எல லேக் சிற்றியில் (ஜா.எல பேரூந்து நிலையத்திற்கு அருகில்) அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா இன்று (28) மாலை 4.00 மணிக்கு மாபோல ஜூம்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக புதல்வர் பர்ஸான் (0776687870) தெரிவித்தார்.

IMG-20180328-WA0014

Web Design by Srilanka Muslims Web Team