சிறுபான்மைக்கு எதிராக சீறும் சட்டம் ..! » Sri Lanka Muslim

சிறுபான்மைக்கு எதிராக சீறும் சட்டம் ..!

FB_IMG_1602592741200

Contributors
author image

Editorial Team

இலங்கையின் ஆரம்ப வரலாற்றில் இருந்து இற்றைவரைக்கும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கை திருநாட்டிற்கு தேசப்பற்றுடையவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆளும்கட்சியோ எதிர்க்கட்சியோ ஏதோ ஒரு பெரும்பான்மை கட்சிக்கு தான் தங்களது ஆதரவையும் நல்கி வருகின்றனர்.
ஆனால் தற்போதைய அரசாங்கமானது சிறுபான்மை மக்களுக்ளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு பாரியதொரு ஆதரவை தரவில்லை என்ற காரணத்தினால் இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுத்தீன் அவர்களை கைது செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களை சீண்டிப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

இது ஒரு ஜனநாயக நாடு, ஜனநாயகமான அரசு என்றால் இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஏ.எல்.எம்.நஸீர் (மு.பா.உ)
அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை

Web Design by The Design Lanka