சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபியிடம் வலியுறுத்தினார் ஐநா செயலாளர் நாயகம்..! - Sri Lanka Muslim

சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபியிடம் வலியுறுத்தினார் ஐநா செயலாளர் நாயகம்..!

Contributors

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கியநாடுகள் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயவிற்கு வலியுறுத்தியுள்ளார்.


ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை நியுயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
கொவிட் 19 தொடர்பில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்துஐநாவின் ஆதரவை செயலாளர் நாயகம் வெளியிட்டார். நல்லிணக்கம் உட்பட உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளரிற்கு தெளிவுபடுத்தினார். இது தொடர்பில் ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர் ஐநாவின் முழுமையான ஆதரவை வெளியிட்டார் என தெரிவித்துள்ள ஐநா இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் எனவும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team