சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்புக்கேட்ட பிடன், காரணம் இதுதான்! » Sri Lanka Muslim

சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்புக்கேட்ட பிடன், காரணம் இதுதான்!

Contributors
author image

Editorial Team

அமெரிக்க நிறவெறி பிடித்த பொலிஸார் ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞனின் மரணத்துக்காக தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார்.

கறுப்பின சிறுமி ஒருத்தியிடம் ஜோ பிடன் மிகுந்த தாக்கத்துடன் மன்னிப்புக் கோரிய சம்பவம் பலரையும் கவர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பிடன் மேற்படி மன்னிப்பு கேட்டதோடு மனிதநேயம் திரும்ப வேண்டும் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த வெள்ளையின பொலிஸார் ஒருவர் குறித்த இளைஞரை கீழே தள்ளி அவரது கழுத்தில் முழங்காலால் அமுக்கி கொலை செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்ததோடு ட்ரம்ப் அரசாங்கத்தின்மீதான பலத்த விமர்சனங்களையும் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team