சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு பிணை - Sri Lanka Muslim

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு பிணை

Contributors

-BBC-

இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்தே, நீதிமன்றம் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்ல நிர்வாகி கல்யாணதிஸ்ஸ தேரருக்கு பிணை வழங்கியது.

அந்த சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்கிற குற்றச்சாட்டில், விசாரணைகளுக்கு பின்னார் அந்த பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

பராமரிப்புக்காகவும் பாதுகாப்புக்காவும் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை விசாரணையில் தெரிய வந்தாலும், சட்டமா அதிபர் அவருக்கு பிணை வழங்க ஆட்சேபணை இல்லை என்று கூறியுள்ளது வருத்தமளிக்கும் செயல் என்று பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் கூறியுள்ளார்.

சாதாரணக் குற்றங்களுக்குக் கூட, கடும் நிபந்தனைகள் விதிக்கின்ற நீதிமன்றம் இந்த வழக்கில் நிபந்தனைகளின்றி பிணை வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பு அதிகார சபையினரும், பொலிசாரும் இன ரீதியாகவும் அரசியல் செல்வாக்குடனும் செயல்படுவதாகவும் மூத்த சட்டத்தரணி ரட்னவேல் குற்றஞ்சாட்டுகிறார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team