சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் இலங்கையில் 61000 முறைப்பாடுகள் - Sri Lanka Muslim

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் இலங்கையில் 61000 முறைப்பாடுகள்

Contributors

கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 61 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள்  கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக அவசர தொலைபேசி இலக்கமான 1926  ஊடாக இதுவரை 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் அதில் 1000 க்கும் அதிகமானவை பொய் முறைப்பாடுகள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக எமது அதிகாரசபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது மேலும் பாடசாலைக்கு மாணவர்களை கூட்டிச்செல்லும் வாகனங்களுக்கு விசேட குறியீடுகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதுடன் ஒவ்வொரு பிரதேசத்திலும் பொலிஸ் நிலையங்களில் மாணவர்களை கூட்டிச்செல்லும் வாகனங்களை பதிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.(gtn)

Web Design by Srilanka Muslims Web Team