சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு வழக்குகளை விசாரிக்க விஷேட நீதிமன்றம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு வழக்குகளை விசாரிக்க விஷேட நீதிமன்றம் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Contributors

சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு குறித்து விசாரிக்க விரைவில் விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அதற்கு நீதவான் மற்றும் மேல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளை விரைவில் நிறைவுக்கு கொண்டுவர இதன்மூலம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பாராளுமன்றில் இன்று (17) தெரிவித்தார்.

ஐதேக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு வருடங்களில் 2420 சிறுவர் துஸ்பிரயோக மற்றும் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 517 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரோசி சேனாநாயக்க இங்கு சுட்டிக்காட்டினார். (அத தெரண – தமிழ்)

Web Design by Srilanka Muslims Web Team