சிறுவர் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்" - யஹியாகான்! - Sri Lanka Muslim

சிறுவர் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்” – யஹியாகான்!

Contributors

சிறுவர் மற்றும் முதியோரின் உரிமை , பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் அவர்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும். அவர்களை அனுசரித்து – முன்னுரிமை வழங்கி நற்பிரஜைகளாக மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நாளில் – சிறுவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன்.

குழந்தைகள் தினமென்று
குதூகலமாய்க் கொண்டாடிடும்
முகமூடிகளில்லா
முத்துக்கள்…..

சிறுவர்கள் தினமென்று
வருடத்தில் ஒரு தினத்தை ஒதுக்கி
ஓரங்கட்டாமல்
வருடம் தோறும்
வாழ்த்திடுவோம்..

வஞ்சனையில்லா
வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கும்
பஞ்சனையவர்கள்….

அள்ளிக் கொஞ்சி
ஆசைதீர்க்கும்
கண்மணிகளை
காத்திடுவோம்…
அவர்களைப்போற்றிடுவோம்….

இன்று அனுஷ்டிக்கப்படும் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யஹியாகான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்றே – முதியோரின் நலன்களும் பேணப்பட்டு அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

முதியோர் இல்லங்கள் மூடப்பட்டு – அவர்களினதும் உரிமைகள் கண்ணியமான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team