சிறு கைத்தொழில் பேட்டைகள் அமைக்கும் பணி ஆரம்பம்; ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதி - Sri Lanka Muslim

சிறு கைத்தொழில் பேட்டைகள் அமைக்கும் பணி ஆரம்பம்; ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதி

Contributors

கிழக்கில் முதலீடு செய்யுங்கள் என்ற திட்டத்தின் கீழ் சுமார் பத்தாயிரம் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் சிறுகைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் பணி நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இத்திட்டத் தினை ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ் முதலாவது கைத்தொழில் பேட்டைக்கான கட்டடத் தொகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் நிறுவப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முதலீட்டாளர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கைத்தொழில் பேட்டையில் அதிகளவிலான முஸ்லிம் யுவதிகளும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் யுவதிகளும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று இனங்களையும் சேர்ந்த யுவதிகளும் தொழில் வாய்ப்பைப் பெறவுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றன.

பத்திற்கு மேற்பட்ட கைத்தொழில் துறைசார் பயிற்சிகள் இந்த யுவதிகளுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team