சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம். நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிவுரை. - Sri Lanka Muslim

சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம். நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிவுரை.

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க பள்ளிவாயலுக்கு வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு ஓட்டமாவடி மாவடிச்சேனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு கிழக்கு மாகாண நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் வாழைச்சேனை நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயம் எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

அவ் எழுத்து மூல அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது அண்மைக்காலமாக எமது பகுதியில் சிறுவர்களைக்கொண்டு பெரியவர்கள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது.

 

அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை ஜூம்மா தினத்தில் ஜூம்மா பள்ளிவாயல் முற்றத்தில் சிறுவர்களுடன் பெண்கள் பிச்சை எடுப்பதற்காக அமர்ந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் இதனால் இதில் சம்மந்தப்படும் சிறுவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதால் இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக எமது திணைக்களம் பொலிசாரின் துணைகொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

 

இதன் காரணத்தால் வெள்ளிக்கிழமை ஜூம்மா தினத்தில் ஜூம்மா பள்ளிவாயல் முற்றத்தில் சிறுவர்களுடன்; பிச்சை எடுப்பதற்காக வருபவர்களுக்கு அனுமதியை வழங்காது தடுத்து உதவுமாறு வாழைச்சேனை நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயத்;தின் பொறுப்பதிகாரி எம்.எம்.எச்.நியாமுதீன்  எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

இவ் எழுத்து மூல அறிவுறுத்தலின் பிரதி கிழக்கு மாகாண நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கும் ,வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர்,பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team