சிறைக்குள் ரஞ்ஜன் சித்திரவதை- அதிர்ச்சி தகவல் அம்பலம். - Sri Lanka Muslim

சிறைக்குள் ரஞ்ஜன் சித்திரவதை- அதிர்ச்சி தகவல் அம்பலம்.

Contributors

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, சிறைச்சாலைக்குள் சித்திரவதைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலிப் வெதஆராச்சி இன்றுகாலை ரஞ்ஜன் எம்.பி சிறை வைக்கப்பட்டுள்ள அங்குனகொல பெலஸ்ஸ சிறைக்கு அவரை சந்திக்கச் சென்றார்.

எனினும் அவரை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன் சிறப்புரிமையை சிறைச்சாலை ஆணையாளர் மீறியிருப்பதாக தெரிவித்தார்.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் முழங்காலில் இரண்டு சத்திரசிகிச்சை செய்திருப்பதால் மலசலகூடம் செல்ல கதிரை வடிவிலான ஆசனமே தேவைப்படுவதாகவும், ஆனால் சிறை அதிகாரிகள் அதனை வழங்க மறுத்திருப்தாகவும் அவர் குறிப்பிட்டார்

Web Design by Srilanka Muslims Web Team