சிறைச்சாலையில் அட்டகாசம் புரிந்த லொகானுக்கு “ஆப்பு” ரெடி! பிரதமர் நாடு திரும்பியதும் இறுதி முடிவு - Sri Lanka Muslim

சிறைச்சாலையில் அட்டகாசம் புரிந்த லொகானுக்கு “ஆப்பு” ரெடி! பிரதமர் நாடு திரும்பியதும் இறுதி முடிவு

Contributors

சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தயின் செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா பொதுசன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நண்பர்கள் குழுவுடன் மதுபோதையில் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பம் குறித்து சிறிலங்கா பொதுசன பெரமுனவின் மத்திய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவுசெய்துள்ளது.

இத்தாலிக்கு பயணம் செய்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ளார். பிரதமரின் வருகைக்குப் பின்னர் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லொகான் ரத்வத்த சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியை மட்டுமே விலகியுள்ளார்.

எனினும் மாணிக்கம் மற்றும் ஆபரணத் தொழில்களுக்கான இராஜாங்க அமைச்சுப் பதவியைத் தொடர்ந்து வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team