சிறையில் அல்ல தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் – மங்கள! - Sri Lanka Muslim

சிறையில் அல்ல தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் – மங்கள!

Contributors

(அத தெரண)

சிறைக்குச் சென்றாலும் தூக்கு தண்டனை பெற்றாலும் மிலேட்சை போக்குடைய ஊழல் நிறைந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நான் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமஙிச்கவும் அவ்வாறே மன்னிப்புக் கேட்க மாட்டார் என அவர் குறிப்பிட்டார்.

மாத்தறை பிரதேசத்தில் ரணில் ஆதரவு மற்றும் எதிராளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட மேல் மாகாணசபை உறுப்பினர் கிரிஷாந்த புஸ்பகுமாரவை நலன் விசாரிக்க இன்று (20) சென்றவேளை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பத்திரிகைகளில் வெளியாகியுள்ள தகவல் உண்மை எனில், யாரேனும் முன்வந்து எனக்கு பிணை வழங்கியிருப்பார்களாயின் இதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்றாட்போல் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் தீர்ப்புக்களை மாற்ற முடியும் என்பது புலனாவதாக மங்கள கூறினார்.

இதிலிருந்து நாட்டின் நீதி நாயின் நிலைக்கு மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கை பொலிஸ் சேவை ராஜபக்ஷ குடும்ப தேவைகளுக்கான சேவையாக நியமிக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 45 பேர் வரையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐவருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஹர்மன் குணதிலக்க எனும் தீவிரவாதியை பொலிஸார் உபசரித்தமை குறித்த காணாளி ஆதாரம் தம்மிடம் இருப்பதாக மங்கள கூறினார்.

மாத்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிம் முறையிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தனியார் ஊடகம் ஒன்றிற்கு எதிராக நீதிமன்றிற்கு செல்லவுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team