சிறையில் லொஹான் ரத்வத்தை தொடர்பான எந்தச் சம்பவமும் நடக்கவில்லையென நான் ஊடகங்களுக்குக் கூறவில்லை - சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்..! - Sri Lanka Muslim

சிறையில் லொஹான் ரத்வத்தை தொடர்பான எந்தச் சம்பவமும் நடக்கவில்லையென நான் ஊடகங்களுக்குக் கூறவில்லை – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்..!

Contributors

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற லொஹான் ரத்வத்தை தொடர்பான சம்பவங்கள் குறித்து தேடிப் பார்த்து விசாரித்து வருவதாக தான் ஊடகங்களில் கூறியதாக வும் இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்று தான் ஊடகங்களுக்கு கூறியதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தான் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்டி சமூக ஊடகங்கள் இத்தகைய பிரசாரத்தை மேற்கொள் கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், குறித்த சம்பவங்களை விசாரிக்க ஏற்கனவே சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team