சிறையில் விமலுக்கு மெத்தை: வீட்டிலிருந்து உணவு » Sri Lanka Muslim

சிறையில் விமலுக்கு மெத்தை: வீட்டிலிருந்து உணவு

wimal

Contributors
author image

Editorial Team

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு தலையணை மற்றும் மெத்தையை சிறைச்சாலை வழங்கியுள்ளது.

வீரவங்சவின் உடல் நிலையை இன்று பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இவற்றை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

வீரவங்சவின் இடுப்பு பகுதியில் உபாதை இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் விமல் வீரவங்சவுக்கு வீட்டில் இருந்து உணவை எடுத்துச் சென்று கொடுக்கவும் சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை சிறைச்சாலைக்கு இன்று மதியம் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வீரவங்சவின் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார்.

வீரவங்ச மெகசீன் சிறைச்சாலையின் ஈ வார்ட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka