சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட் - Sri Lanka Muslim

சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட்

Contributors

(இப்னு ஜமால்தீன் )

சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல் என்னை இனவாதியாக காட்டுவதன் மூலம் இம்மக்களிடத்தில் தாங்கள் தான் தமிழ் மக்களின் நலன்களில் கருசனை கொள்பவர்கள் என்ற மாயயைக் காட்டுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படாமைக்கு அராசாங்கத்தில் ஒட்டியிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீனே காரணம் என்ற பாராளுமன்ற உறுப்பினர்  அரயேந்திரனின் கூற்று தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளம் அவரிடம் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் நான் முஸ்லிம்களை பிரதிநித்துவம் செய்யும் அமைச்சராக இருந்தும் இனம் மதம் பிரதேச வேறுபாடின்றி முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்து வருகின்றேன்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே என்மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். இதுவரை காலமும் என்னை தமிழர்களுக்கு எதிரானவராக தமிழ் மக்களுக்கு காட்டிய தமிழ்த் தேசியவாதிகள் இன்று என்னை முஸ்லிம்களுக்கும் எதிரானவனாக காட்ட முட்படுகின்றனர்.

தேர்தல் பிரச்சார காலத்தில் நான் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை குடியேற்றுவதாக குற்றஞ்சாட்டி வந்த இவர்கள் இன்று முஸ்லிம்கள் குடியேற்றப்படாமைக்கு நான் தான் காரணம் என்று அறிக்கை விடுகின்றனர். இவர்கள் மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டி தாங்கள் தான் தமிழ்; முஸ்லிம்கள் தொடர்பாக சிந்திக்கின்றோம் என்ற பொய் முகமூடியை அணிந்து கொண்டிருக்கின்றனர்.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். பாதிக்பட்ட இம்மக்கள் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். இதனால் என்னை இனவாதியாக மக்களிடம் காட்டி அரசியல் செய்வதை விடுத்து இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி  முடியுமானால் நல்ல பெயரை சம்மாதித்துக் கொள்ளட்டும்.

மேலும் தமிழ்த் தேசிவாதிகள் ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. இவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் என்னை தமிழ் மக்களின் எதிரியாகக் காட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் பிழைப்புக்கு ஏது வழி என மேலும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team