"சிலேவ் ஜலன்ட்" பிரதேசத்தினை சந்தேகக் கண்னோடு பாா்க்கின்றனா் - ரவூப் ஹக்கீம் » Sri Lanka Muslim

“சிலேவ் ஜலன்ட்” பிரதேசத்தினை சந்தேகக் கண்னோடு பாா்க்கின்றனா் – ரவூப் ஹக்கீம்

h66

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு பொம்பனித்தெரு பிரதேசத்தை அண்டி வாழும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்களினால் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடத்தை கல்விக்காகவும், ஆண்மீகம்,மற்றும் தங்களது பிரத்தியோக கற்றல் நடவடிக்கைக்கா முற்றாக பயன்படுத்தலாம். அத்துடன் இப்பிரதேச கல்விக்காக ஒரு நிதியமும் ஆரம்பித்து தரப்படும். இக் கட்டிடமும் தங்களது கொம்பணி வீதி பிரதேசத்திலேயே அமையப்பெற்றுள்ளது. என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

கொழும்பு -02 சிலேவ் ஜலண்ட் பிரதேசத்தில் வாழும் 3000 மாணவ மாணவிகளுக்கு அப்பியாச புத்தகங்கள் பாடசாலை உபகரணங்கள்ஹைட் பார்க் மைதாணத்தில் வைத்து நேற்று (11) அமைச்சா் ரவுப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்சத் நிசாம்டீன், மற்றும் கொழும்பு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.ஜ.எம் அனஸ் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை சிலேவ் ஜலண்ட் பிரிமிய லீக் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் பிரதம அதிதியகாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அமைச்சா் ரவுப் ஹக்கீம் தெரிவித்தாா்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகின்றன. இந்த பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெறுவதற்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலண்டன் வெள்ளையா் ஆட்சிக் காலத்தில் சிலேவ் ஜலண்ட் என்ற பொம்பனி பிரதேசம் இராணுவ முகாம்கள் இருந்ததொரு பிரதேசமாகும். இவ் நிகழ்வுக்கு இங்கு வருகை தந்துள்ளவா்களின் பாட்டனாா்கள் , தந்தைகள் அப்போது பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கை இராணுவத்தில் சேவை செய்திருக்கக் கூடும். கொழும்பிலும், சிலரினதும் பாா்வையில் சிலேவ் ஜலன்ட் என்ற பிரதேசத்தினை ஒரு சந்தேகக் கண்னோடு பாா்க்கின்றனா்.

இப் பிரதேச வாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயா்த்துவதற்கும் கல்வி, வீடமைப்பு, வாழ்க்தைத்தரம் மற்றும் சமுகம் சாா்ந்த பிரச்சினைகளை தீா்ப்பதற்கு மிக நீண்ட காலமாக இப் பிரதேசத்தில் இயங்கி வரும் சிலேவ் ஜலண்ட் பிரிமிய லீக் விளையாட்டுக் கழகம் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்சத் மற்றும் அனஸ் ஆகியோருடன் இணைந்து திறம்பட செயல்பட்டு வருகின்றது. முன்னைய ஆட்சியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலளாா கோட்டாபாய ராஜபக்ச உத்தரவின் பேரிில் இப்பிரதேச வாழ் மக்களது வீடுகளை புல்டோசா் கொண்டு உடைத்து தள்ளினாா்கள். அதனை எதிா்த்து இந்த கழகம் முன்வந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். என அமைச்சா் ரவுப் ஹக்கீம் அங்கு தெரிவித்தாா்.

இங்கு உரையாற்றிய அர்சத் – சிலேவ் ஜலன்ட் பிரதேசத்தில் இருந்து சென் மேரி கல்லுாாியில் சிங்கள மொழி மூலம் முஸ்லீம் மாணவி ஒருவா் க.பொ.உயா்தரத்தில் ”3 ஏ” எடுத்துள்ளதாகவும் மேலும் 3 மாணவிகள் பல்கழைக்கழக செல்ல தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தாா். இப்பிரதேசம் கல்வித்துறையில் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றது .

இங்கு வருகை தந்துள்ள 3000 பெற்றோா்களும் தமது பிள்ளைகளது கல்வியில் கூடிய அக்கரை செலுத்தல் வேண்டும். க.பொ.த. உயா்தரம், சாதாரண தரம் கற்றவுடன் பெற்றோா்கள் தமது பிள்ளைகளது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனா். 16 வயதிலேயே பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றனா். அல்லது தொழிலுக்கு அனுப்புவதாக இப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை அதிபாகள் ஆசிரியா்கள் தன்னிடம் குறையாக தெரிவித்தாா்கள்.

தமது பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றுதல் வேண்டும். நாம் கல்வியில் முன்னேறினால் தான் எமது பிரதேசமும். வாழ்க்கைத் தரம் முன்னேறும். எமது பிரசேதப் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக ஆகக் குறைந்தது ஆசிரியைத் தொழிலையாவது பெற்றுக் கொள்வதற்கு தமது பிள்ளைகளை கல்வி கற்பித்தல் வேண்டும் என வேண்டிக் கொண்டாா் மாகாண சபை உறுப்பினர் அர்சத் நிசம்டின்.

SAMSUNG CSC

SAMSUNG CSC

h-jpg2-jpg3

Web Design by The Design Lanka