சீதனத்தினால் இழந்த உயிர்; கனவல்ல இது நிஜம் (கத்தாரில் நடந்த உண்மைச் சம்பவம்) - Sri Lanka Muslim

சீதனத்தினால் இழந்த உயிர்; கனவல்ல இது நிஜம் (கத்தாரில் நடந்த உண்மைச் சம்பவம்)

Contributors
author image

சம்மாந்துறை அன்சார்

(கத்தாரிலிருந்து சர்ஜூன்)
கண்கலங்கியவனாக உண்மையை உரக்க எத்தணிக்கின்றேன் அன்று
காலை 6.30 மணி கட்டார் நேரம்
நான் வேலைக்கு செல்வதற்கு பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருந்தேன்

ஒரு மனிதர் என்னோடு எப்போதும் வழமையாக பஸ்ஸில் வருவார் நான் அவரோடு பேசியது இல்லை ஆனால் முகம் பார்த்து புன்னகையுடன் ஒரு சலாம் அவரின் தோற்றம் அழுக்கு படிந்த நீல நிற முழுவதும் மூடிய ஆடை கையில் ஒரு சாப்பாடு பார்சல் பார்ப்பதற்கு ஏழ்மையான தோற்றம் நாள் போக்கில் அவரோடு பழகக் கிடைத்ததால் அவரோடு பஸ்ஸில் 25 நிமிடம் பேசி கொண்டு செல்வது வழக்கம் ஒரு நாள் அவர் பஸ்தரிப்பிடம் வரவில்லை நானும் அந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வில்லை

இரண்டு நாட்களின் பின் பஸ்தரிப்பிடத்தில் நின்றார் அந்த மனிதர் நான் அவரை பார்த்து புன்னகையுடன் சலாம் சொன்னேன் அப்போது அவரது முகம் சோகம் நிறைந்து இருந்தது ஏதோ ஒரு சம்பவம் நடந்து இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரோடு பேச ஆரம்பித்தேன் எங்க ஆள காணோம் இரண்டு நாளா சுகம் இல்லையா உங்களுக்கு என்றுதான் கேட்டேன்

உடனே அவர் கண்கலங்கியவராக சொன்னார் என் வாழ்க்கையே போச்சு தம்பி 23 வருடமா என்னோட இருந்த மனைவி மௌத் ஆகிட்டா என்று சொன்னார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் என் இன்பத்திலும் துன்பத்திலும் என் பக்கத்துல இருந்தவள் தம்பி இப்போ இல்ல மௌத் எல்லாருக்கும் இருக்கு தம்பி ஆனா என் மனைவி மௌத் ஆக போரன்டு முன்னாடி தெரியும் தம்பி இதயத்தில் ஒரு அடைப்பு அத ஆப்ரேசன் பண்ணி இருந்தா சரி ஆகி இருக்கும் ஆனாலும் என்னால ஆப்ரேசன் பண்ண காசி இல்ல தம்பி நான் உடனே கேட்டேன் கத்தார்ல உழைக்கிற காச வச்சி ஆப்ரேசன் பண்ணி இருக்கலாமே என்று அதற்கு அந்த மனிதர் நான் 14 வருசமா உழைச்ச காச வீடு கட்டியே முடிச்சிட்டன் தம்பி அப்படியா எத்தன வீடு கட்டி இருக்கிங்க 3 வீடு தம்பி 3ஆவது வீடு இன்னும் முழுசா கட்டி முடிக்கல இன்னும் பூச்சு வேல இருக்கு என்று சொன்னார்

4 பொட்ட பிள்ளைகளை கரை ஏற்ற என் அன்பு மனைவியை இழந்துட்டன் தம்பி கடைசியா அவள் முகத்த பார்க்க வக்கில்லாதவனாக போகிட்டன் என்று வயதிலும் தோற்றத்திலும் முதிர்ந்த அந்த அப்பாவி மனிதர் கதறி அழுதது என் கண் முன்னே இப்போதும் இருக்கின்றது

அப்போதுதான் தெரிந்தது அவரது மனைவி இறந்தது மாரடைப்பால் இல்லை முதுகெலும்பு இல்லாத ஆண் வர்க்கம் வாங்கும் சீதனம் என்ற கொடிய மிருகத்தால் சீதனம்=விபச்சாரம்+மரணம் இதை யாரலும் மறுக்க முடியாது மாற்றத்தை எம்மில் இருந்து உருவாக்குவோம் இது ஒரு கதை அல்ல உண்மை சம்பவம் சீதனத்தை விரட்டி அடிப்போம்
அனைவரும் ஒன்றினைவோம் இன்ஷா அல்லாஹ்

 

Web Design by Srilanka Muslims Web Team