சீனாவின் கொரோனா தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை : பாகிஸ்தான் - Sri Lanka Muslim

சீனாவின் கொரோனா தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை : பாகிஸ்தான்

Contributors

சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானுக்கு சீனா சினோபார்ம் என்ற தடுப்பூசியை கடந்த திங்கட்கிழமை வழங்கியது. சீனா வழங்கிய ஐந்து லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தான் நேற்று செலுத்தும் நடைமுறையை தொடங்கியது.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதன்பின் வயதுடையவர்களுக்கும், பின்னர் அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வல்லூநர் குழுவின் முதற்கட்ட ஆய்வில் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை என பரிந்துரை செய்துள்ளதாக, பிரமருக்கான சுகாதார சிறப்பு உதவியாளர் டாக்டர் பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

அந்த குழு 18 வயதில் இருந்து 60 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டுமே செலுத்த பரிந்துரை செய்துள்ளது. மேற்கொண்டு ஆய்வுகளை செய்து அதன்பின் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

பாகிஸ்தான் அரசு சீனோபார்ம் உடன் ரஷியாவின் ஸ்புட்னிக் வி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து தயாரித்துள்ள கோவாக், ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கோவாக்ஸ் முதற்கட்டமாக 17 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து பாகிஸ்தானுக்கு இந்த வருடத்தின் பாதிக்குள் வழங்க இருக்கிறது. இந்த தடுப்பூசி முதியோர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team