சீனாவிலிருந்து புறப்பட்டு அதிகாலையில் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சிறப்பு விமானம்..! - Sri Lanka Muslim

சீனாவிலிருந்து புறப்பட்டு அதிகாலையில் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சிறப்பு விமானம்..!

Contributors

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த தடுப்பூசிகள் பெய்ஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு தரையிறங்கின. இந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

Web Design by Srilanka Muslims Web Team